இந்த வார ராசி பலன்கள் - 02-03-2018 முதல் 08-03-2018

Report Print Kavitha in ஜோதிடம்
726Shares
726Shares
lankasrimarket.com

இந்த வார ராசி பலன்கள் என்வொன்று பார்ப்போம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் மின் சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவினங்கள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துகளிலிருந்து பங்கு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை ரிப்பேர் செய்யும் நிலை உருவாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். 07-03-2018 அன்று மாலை 04-07 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விடயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விடயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

ரிஷபம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழில் சிறப்படையும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சங்கடம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனம் அலைபாயும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் வழிகாட்டல் நன்மை ஏற்படுத்தும்.

மிதுனம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாமிடத்தில் தொழில் சார்ந்த படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.

கடகம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் செயல்கள் மன சங்கடத்தை உண்டாக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நில புலன்கள் மூலம் பண வரவு கிடைக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பிறருடன் சச்சரவைத் தவிர்க்கவும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் செயல்கள் மனக்கஷ்டத்தை உண்டாகும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பிரயாணத்தால் நன்மை உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை உண்டாகலாம். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும்.

கன்னி

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயத் தொழில் சிறப்படையும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் தெளிவு உண்டாகும்.

துலாம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலபுலன்களின் மூலம் பண வரவு கிடைக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகங்களில் சிறப்பு உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பணியில் இட மாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை மேன்மையடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் குடும்பத்தில் குதர்க்கமான வார்த்தையை தவிர்க்கவும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும் பேச்சினை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ வழிபாடு குடும்ப குழப்பத்தை தவிர்க்க உதவும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும்.

தனுசு

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகைகளில் செலவுகள் அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் உண்டாகும் சஞ்சலத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

கும்பம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழிலில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் கோயில்களுக்காக செலவுகள் செய்வீர்கள். 02-03-2018 அன்று இரவு 03-45 மணி முதல் 05-03-2018 அன்று காலை 08-11 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விடயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மீனம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்துக்கள் கிடைக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மதி நுட்பம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வருமானம் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்கள் உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வருவார்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருள் கிடைக்கும். 05-03-2018 அன்று காலை 08-11 மணி முதல் 07-03-2018 அன்று மாலை 04-07 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விடயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விடயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்