அஜீத்-விஜய் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி மரணம்!

Report Print Kabilan in பொழுதுபோக்கு

விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகனும், பிரபல தயாரிப்பாளருமான பி.வெங்கட்ராம ரெட்டி இன்று காலமானார்.

அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா, தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி.

இவர் விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியின் இளைய மகன் ஆவார். இந்நிலையில், 75 வயதான பி.வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் காலமானார்.

இவருக்கு மனைவி பாரதிரெட்டி, ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நாளை காலை நடைபெற்று, அதன் பின்னர் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.வெங்கட்ராம ரெட்டியில் தயாரிப்பில் 6வது படமான ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்