இஸ்லாமிய குழந்தைகளால் ஜேர்மனிக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
220Shares
220Shares
ibctamil.com

அபாயம் உள்ளதாக ஜேர்மனியின் உள் நாட்டு உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அதிகாரிகள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

ஜேர்மனியில் இஸ்லாமிய வீடுகளில் வளரும் சிறுவர்களால் குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் உள்ளதாக ஜேர்மனியின் உள் நாட்டு உளவுத்துறை தலைவரான Hans Georg Maassen நேற்று தெரிவித்தார்.

Funke media group என்னும் அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி சிறுவர்களையும் வளரிளம்பருவத்தினரையும் தீவிரவாதச் செயல்களை ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேகமாக நடந்து வருவதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக உள் நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் சுமார் 300 சிறுவர்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இத்தகைய குடும்பங்கள் சிலவற்றில், பிறருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் நியாயமானவை என்றும் அவர்களது அமைப்பில் இல்லாதவர்களை மட்டம் தட்டலாம் என்றும் கற்றுக் கொடுக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

இத்தகைய கண்டுபிடிப்புகளின் விளைவாக சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறுவர்கள் கண்காணிக்கப்படும் வயதை 14க்கு கீழே குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இதன் நோக்கம் சிறுவர்களை குற்றவாளிகளாகக் காட்டுவது அல்ல என்றும் குழந்தைகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளால் நம் நாட்டுக்கு உள்ள அபாயங்களை தவிர்ப்பதற்காகத்தான் என்று CDU கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான Patrick Sensburg கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஜேர்மன் சிவில் உரிமைகள் அமைப்பான Humanist Union, குழந்தைகள் இன்னும் முழுவதும் முதிர்ச்சியடையாததால் அவர்களது எண்ணங்களும் கருத்துகளும் மாறக்கூடியவை, அதனால் குழந்தைகளை நாட்டுக்கு அபாயமானவர்களாக கருதுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.

சிறுவர்களை கண்காணிப்பின் கீழ் வைத்தல் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுதலாகும் என்று Humanist Unionஇன் போர்டு உறுப்பினரான Martin Kutscha தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்