மகள் பிறந்த விவகாரம்: ஜெயலலிதா உறவினர் சொல்வது உண்மையா?

Report Print Arbin Arbin in இந்தியா
574Shares

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததாக அவரது உறவினர் கூறும் விளக்கங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் உள்ளதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மகள் நான் தான் என அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் துவங்கிய பரபரப்பு, ஜெயலலிதாவின் உறவினர் லலிதா சொன்ன தகவல்களால் இப்போது உச்சம் பெற்றிருக்கிறது.

மட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபு என திட்டவட்டமாகச் சொல்லும் லலிதா உண்மைக்கு புறம்பாக தகவல் வெளியிடுவதாக தற்போது மூத்த பத்திரிகையாளர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததாகச் சொல்லப்படும் 1980 முதல் 81ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பத்திரிகையாளர்கள் பலர் ஜெயலலிதாவை வாரந்தவறாமல் நேரில் சந்தித்து வந்தோம்.

இதழ்களுக்கு தொடர் பெறுவதற்காக அந்தச்சந்திப்பு நிகழ்ந்தது என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மட்டுமின்றி தற்போதைய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், 1991ல் நான் அமைச்சராக இருந்தேன். அப்போது சென்னை வந்தபோது, ஜெயலலிதா விருந்து கொடுத்தார்.

ஜெயலலிதாவிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த போது, உங்களுக்கு மகள் இருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா எனக்கேட்டேன்.

அதற்கு அவர் மிகவும் கோபப்பட்டார். இது 'கருணாநிதியின் பொய் பிரச்சாரம்' என்றார். அவர் சொன்னதை நான் நம்பினேன். அதன் பின்னர் இப்படியான எந்த தகவலையும் நான் கேட்கவில்லை," என்றார்.

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாக சர்ச்சை எழுந்த போதெல்லாம் அதீதமாகவே கோபப்பட்டுள்ளார். தனக்கு மகள் இருப்பதாக பேட்டிக்கொடுத்தவர்கள் மீதும், நான் தான் மகள் என்றவர்கள் மீதும், அதை பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடரவும் செய்தார். ஆனால் இதைக்கடந்து இந்த விவகாரம் குறித்து அவர் எதையும் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்