சொகுசு பங்களாவில் 15 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்புகள்: தமிழகத்தை அதிர வைத்த தம்பதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த தம்பதியினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனந்தி என்பவர் சொகுசு பங்களாவை பயன்படுத்தி கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார் மற்றும் சுகாதாரத்துறையினர் சோதனை செய்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கருக்கலைப்பு செய்ய வருவோரை மறைவாக வைத்திருக்க ஏதுவாக சிறிய அளவிலான அறைகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனந்தி வீட்டுக்குள் நுழைந்து அதிரடி சோதனை போட்டனர். அப்போது, அங்கு கருக்கலைப்புக்குப் பயன்படுத்தி வந்த லேப்டாப் வடிவிலான ஸ்கேன் கருவி, ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கருக்கலைப்பில் ஈடுபட்ட ஆனந்தியையும் அவருக்குத் துணையாக இருந்த அவரின் கணவர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோரைப் பாலின தேர்வு தடுப்புச் சட்டம் 419,420 கீழ் வழக்கு பதிந்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியதாவது, சட்டவிரோத கருக்கலைப்பு செய்த ஆனந்தியின் ஸ்கேன் கருவி, போன் கால் ஆகியற்றை தீவிரமாகச் சோதனை செய்ததில் பல திகிக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

பள்ளிப்படிப்பையே தாண்டாத ஆனந்தி கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 19,000-க்கும் மேல் சிசு கருக்கலைப்பு செய்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்கும்போதே எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என்றவர், ஆனந்தி மீதும் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

வசூல் வேட்டை

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆனந்தி ஸ்கேன் சென்டர் தொடங்கி இதுபோல் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக கணவர் தமிழ்செல்வன், வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கு உதவியாக ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் உள்ளிட்டோர் செயல்பட்டு வந்துள்ளனர்.

குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்வதற்காக 6 ஆயிரம் ரூபாய் வாங்குவதும், கருக்கலைப்பு செய்வதற்கு அவரவர் வசதிக்கு ஏற்றார் போல 20 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை வசூலிப்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர்கள் மீண்டும் இதுபோன்ற கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டு வந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பதியினரின் இந்த செயல் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers