காதல் திருமணத்தால் இந்தியாவை பரபரப்பாக்கிய இளம்பெண் ஹாதியாவின் புதிய முயற்சி!

Report Print Arbin Arbin in இந்தியா

மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ஹாதியா கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மருத்துவமனை தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா, தமிழகத்தில் உள்ள சேலம் ஓமியோபதி கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது அவர் கேரளாவை சேர்ந்த ஷெபின் ஜஹான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பெண்ணின் தந்தை அசோகன் தனது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்துக்கு தடை விதித்தது.

இவர்கள் காதல் திருமணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

எனது விருப்பத்தின் பேரில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணத்தை அங்கீகரித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹாதியா, ஷெபின் ஜஹான் திருமணத்தை அங்கீரித்தது. மேலும் சேலத்தில் படிப்பு முடியும் அவரை அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மருத்துவ படிப்பை முடித்த ஹாதியா கேரள மாநிலம் மலப்புறத்தில் உள்ள ஒட்டுகுங்கலில் கிளினிக் தொடங்கினார்.

அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கிளினிக்கை திறந்து வைத்தார். தனது மனைவி மருத்துவமனை தொடங்கியது குறித்து அவரது கணவர் ஷெபின் ஜஹான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...