நாங்க சாவதற்குள் அவர்கள் முகத்தை ஒரு தடவை பார்க்கணும்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் கண்ணீர்

Report Print Raju Raju in இந்தியா

தங்களை கைவிட்ட பிள்ளைகளை, இறப்பதற்குள் ஒருமுறை பார்க்க வேண்டும் என தவிக்கும் வயதான பெற்றோரின் பின்னணி மனதை கலங்கடிக்கும் விதத்தில் உள்ளது.

தமிழகத்தின் நாகர்கோவிலில் உள்ள காலி இடத்தில் குடிசையில் வசித்து வந்தனர் கணேசன் (70) மற்றும் சரசு (65) தம்பதி.

முன்னர் பட்டா நிலத்தில் வீடு கட்டி கணேசனின் பெற்றோர் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், ரயில் பாதை அமைக்கும் போது நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்து தற்போது மார்த்தாண்டத்தில் உள்ள பாலத்துக்கு அடியில் தான் கணேசன் மற்றும் சரசு ஆகியோர் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.

இவர்களுக்கு லட்சுமி என்ற மகளும் சத்யராஜ் என்ற மகனும் பிறந்தனர். குடை ரிப்பேர் செய்யும் வேலை பார்த்தும், செருப்பு தைத்தும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார் கணேசன். ஆனால் வளர்ந்து ஆளான பிறகு லட்சுமியும் சத்யராஜும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு ஆளுக்கு ஒரு திசைக்குச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து முதுமையில் வாடும் கணேசன் மற்றும் சரசுவை கவனித்து கொள்ளக் கூட ஆள் இல்லை.

தற்போது தெருத்தெருவாக குடை ரிப்பேர் செய்வது, செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

பல சமயம் இவர்கள் பட்டினியாக தான் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என துடித்து வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கல்யாணம் ஆகி கேரளத்துக்குப் போன பிள்ளைகள் எங்களைத் தேடி வராததால் அவர்களை தேடி நாங்கள் 7 ஆண்டுகளாக அலைந்தோம்.

ஆனால் தற்போது உடலில் தெம்பில்லாததால் அவர்களை தேட முடியவில்லை.

நாங்கள் செத்துப்போறதுக்கு முன்னாடி எங்கள் பிள்ளைகள் முகத்த ஒருமுறை பார்த்தா மட்டும் போதும் என்று தழுதழுத்த குரலில் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்