தாலி கட்டும் சில மணிநேரத்துக்கு முன் புதுமாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷாக் தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் திருமணத்தின் போது பெற்றோருக்கு தெரியாமல் மணப்பெண் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரியின் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி(வயது 23).

பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திருமணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை நடந்தது.

மணமகனின் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஷாமிலி வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது பொலிசுடன் அங்கே வந்த இளைஞர் ஒருவர், ஷாமிலி தன்னுடைய மனைவி என்றும், தற்போது கட்டாய திருமணம் நடக்கிறது எனக்கூறியும் பரபரப்பை கிளப்பினார்.

இதனால் மண்டபமே பரபரப்பாக, மணப்பெண்ணுடன் அவரது பெற்றோரையும் பொலிசார் அழைத்து சென்றனர்.

அங்கு விசாரணையில், தன்னுடன் படித்து வந்த ராஜ் என்பவரை காதலித்ததை ஒப்புக்கொண்ட ஷாமிலி, கடந்தாண்டு செப்டம்பர் மாதமே திருமணம் செய்து கொண்டதையும் ஒப்புக்கொண்டார்.

திருமணம் முடிந்த கையொடு இருவரும் அவரவர்கள் வீட்டில் வசித்தும் வந்துள்ளனர், இதற்கிடையே ஷாமிலிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க, பயத்தில் திருமணம் செய்து கொண்டது குறித்து சொல்லவில்லையாம்.

இதற்கிடையே ராஜ் இ-பாஸ் பெற முயற்சித்தும் பலனில்லாமல் போனது என கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் மேஜர் என்பதால் ஷாமிலி ராஜீவுடன் பொலிசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்