தலைபாரம், காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவற்றிலிருந்து விடுதலை வேண்டுமா? இதோ சில கை வைத்தியம்!

Report Print Kavitha in மருத்துவம்
1233Shares

சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட நம்மில் பெரும்பாலோனர் செயற்கை மருத்துவத்தை தான் நாடுவதுண்டு.

ஆனால் அடிக்கடி செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன் மூலம் பக்கவிளைவுகள் கட்டாயம் அதிகமாகும்.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் கையாண்டு வந்த சின்ன சின்ன கை வைத்தியத்தை செய்து வந்தால், அடிக்கடி வரக் கூடிய உடல் உபாதைகளை நிரந்தரமாக நீக்க முடியும்.

அந்தவகையில் தற்போது தலைபாரம், காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற என்னென்ன வைத்தியங்களை பின்பற்றிலாம் என பார்ப்போம்.

  • தலைபாரம் போக்க சுக்கு, பெருங்காயம் இந்த இரண்டையும் மஞ்சள் இழைக்கும் கல்லால் இழைத்து, அந்த விழுதை எடுத்து தலையில் பத்து போட்டுக்கொண்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் தலையில் இருக்கும் நீர் அனைத்துமே காணாமல் போய்விடும்.

  • தூதுவளைக் கீரை என்று ஒன்று இருக்கின்றது. இந்த தூதுவளைக் கீரையை வாங்கி சாறு பிழிந்து 1/2 சங்கடை அளவு கொடுத்தால் கூட, நெஞ்சு சளி காணாமல் போய்விடும்.

  • தொண்டை சளியை போக்க ஒரு சங்கடை கண்டங்கத்தரி வேர் சாறு போதும். கண்டங்கத்திரி வேர், நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி, தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை இரண்டு சங்கடை அளவு கொடுக்க வேண்டும்.

  • பப்பாளி இலையை எடுத்து, நன்றாக அரைத்து, பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு, 1/4 கப் அளவு குடித்து விட்டாலே போதும். எப்பேர்ப்பட்ட கொடிய காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும்.

  • 11 மிளகு, 3 வில்வ இலைகள், இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மென்னு முழுங்கி தண்ணீரை குடித்து விட்டால், காய்ச்சலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

  • குடல்புழு வயிற்றிலிருந்து சுத்தமாக வெளியேற விளக்கெண்ணெய், வேப்பங்கொழுந்து இந்த இரண்டு பொருள் மட்டுமே போதும். வேப்ப இலையை நன்றாக அரைத்து, சாறு எடுத்து, விளக்கெண்ணெய் சேர்த்து அப்படியே சாப்பிட்டு விடவேண்டும். உங்களுடைய வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் செத்துப்போய் மலம் வழியாக வெளியேறிவிடும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்