11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.... 1,200 பேர் தீவிர கண்காணிப்பில்: பெண் மருத்துவர் மீது வழக்கு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பிரபல மருத்துவர்களில் ஒருவர் 1,200 பேருக்கு கொரோனா அபாயத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் தற்போது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார்.

ரஷ்ய மருத்துவரான Irina Sannikova சமீபத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய அவர் தமது சகாக்களிடமும் தெரிவிக்காமல், சுய தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகாமல் மருத்துவ மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மட்டுமின்றி மருத்துவர்கள் இளம் மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 பேருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவரின் நடவடிக்கையால் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 700 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 500 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் சரிபாதி பரப்பளவை கொண்டுள்ள Stavropol பகுதியை சேர்ந்தவர் இந்த மருத்துவர் Irina Sannikova.

ஸ்பெயினில் இருந்து திரும்பிய ஆறாவது நாள் Irina Sannikova-கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவர் Irina Sannikova மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பிராந்திய ஆளுநர், அவர் ஒரு பொறுப்பற்ற நபர், குணமாகட்டும், அதன் பிறகு அவரை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்