பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரை தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
அதாவது இந்த மாத்திரைகள் மூளையில் சுருக்கத்தை ஏற்படுத்தி அதன் வடிவத்தை மாற்றுவதுடன், தொழிற்பாடுகளிலும் தாக்கத்தை செலுத்துவதாக எச்சரித்துள்ளனர்.
2015ம் ஆண்டில் கலிபோர்னிய பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர்கள் 90 பெண்களின் மூளையை ஸ்கான் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இவர்களது மூளையின் இரு பகுதிகள் அளவில் சிறியதாக மாறியிருந்தது.
எனினும் இதற்கான காரணத்தினை அப்போது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே தற்போது இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.