மனைவி துரோகம் செய்தால் அடிக்கலாமா?: ஆய்வு! இலங்கை வாலிபர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பையன்களில் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினர் பெண்களை அடிப்பது சரியானதுதான் என கருதுவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, பெண்களுக்கெதிரான வன்முறைக்கு, சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

10 மாகாணங்களிலுள்ள 17 முதல் 18 வயதுடைய 8,300 பேரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களில் பாதி பேர் வாலிபர்கள்.

அந்த கேள்விகளில், கீழ்க்கண்ட வாக்கியங்களில் உள்ள விடயங்களை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது ’மனைவி கணவனுக்கு துரோகம் செய்தால், அவன் அவளை அடிக்கலாம்’.

‘குடும்பத்தலைவன் தேவையானால் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்’ என்பவைதான் அந்த வாக்கியங்கள்.

இந்த கேள்விக்கான விடைகள் மதம் சார்ந்து மற்றும் ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்து அதிக அளவில் வேறுபட்டன. மொத்தத்தில் 7 சதவிகிதம் வாலிபர்கள் இரண்டு வாக்கியங்களும் நியாயம்தான் என ஒப்புக் கொண்டனர்.

இஸ்லாமிய சிறுவர்களைப் பொருத்தவரையில் இந்த சதவிகிதம் அதிகமாக இருந்தது அதாவது 19.4 சதவிகிதமாக இருந்தது.

அதே நேரத்தில் கத்தோலிக்கர்கள் 7.1 சதவிகிதமும், பிற கிறிஸ்தவர்கள் 7.1 சதவிகிதமும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் 4.8 சதவிகிதமும், ஒப்புக்கொள்வதற்கு சங்கோஜப்பட்டனர்.

ஒருவர் எந்த நாட்டவர் என்பதைப் பொருத்தவரையில், இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

இலங்கை வம்சாவளி வாலிபர்களில் 23.2%, மாசிடோனியா சிறுவர்கள் 21.2%, கொசோவா 19.1%, துருக்கி 15.5% மற்றும் இத்தாலி 11.2% என இவர்கள்தான் அதிகம் பெண்களுக்கெதிரான வன்முறை சரிதான் என ஒப்புக்கொண்டனர்.

போர்ச்சுகல் (9.1%), பிரான்ஸ் (6.3%), ஜேர்மனி (5.4%) மற்றும் சுவிட்சர்லாந்து (4.6%) ஆகிய நாடுகளைப் பொருத்தவரையில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது.

சமூக அந்தஸ்தோ, ஒருவர் கிராமத்தவரா அல்லது நகரத்தவரா என்ற விடயங்களோ இந்த எண்ணத்தை எந்த அளவிலும் வித்தியாசப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்