அமெரிக்க தேர்தல் தொடர்பில் அதிகம் தேடப்பட்ட ஒரு இந்து பெண்மணி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

2020 அமெரிக்க தேர்தல் தொடர்பில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராக ஒரு இந்து பெண்மணி பிரபலமடைந்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டபோது பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தார் துளசி கபார்ட் (38).

ஆனால் முதல் விவாதத்தில் கலந்து கொண்ட உடனேயே கூகுளில் அதிகம் தேடப்பட்ட வேட்பாளர் என்னும் பெருமையை அவர் பெற்று விட்டார்.

10 வேட்பாளர்கள் கலந்து கொண்ட விவாதத்தில் ஏழாவதாக பேசிய துளசி வெறும் 6.6. நிமிடங்கள்தான் பேசினார்.

வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க இது போதாதுதான். ஆனால் விவாதங்களின்போது அவரைத்தான் அதிகம்பேர் கூகுளில் தேடியிருந்தார்கள்.

ஏனென்றால், இதற்கு முன்பே பல சர்ச்சைக்குரிய காரணங்களுக்காக பிரபலமாகியிருந்தார் துளசி.

அமெரிக்க அரசியல்வாதிகள் யாரும் சந்திக்காத ஒரு நபரை துளசி சந்தித்திருந்தார். அவர், சர்ச்சைக்குரிய சிரிய அதிபரான பஷார் அல் அசாத்.

எனது மனதை பாரப்படுத்திய சிரிய மக்களின் துயரம்தான் என்னை சிரியாவுக்கு போக வைத்தது என்று காரணமும் கூறியிருந்தார் துளசி.

அத்துடன் இளவயதில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் அவர் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.

துளசி இந்து மதத்தை பின்பற்றுபவரும், சைவ உணவுப் பிரியருமாவார்.

துளசியின் கணவர் பெயர் ஆபிரஹாம் வில்லியம்ஸ், ஆபிரஹாம் துளசியின் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்